சுவிஸ் ஏரிகளில் வெப்பநிலை உயர்வடைந்துள்ளதாக எச்சரிக்கை சில சுவிஸ் ஏரிகளில் வெப்பநிலை உயர்ந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏனென்றால்இ தற்போதைய வெப்ப அலையின் போது சுவிட்சர்லாந்தின் சில ஏரிகளில் நீர் வெப்பநிலை வெப்பமண்டல அளவை எட்டியுள்ளது என்று Eawag நீர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது .

உதாரணமாக, கடந்த நாட்களில் லுகானோ ஏரியில் நீர் வெப்பநிலை 29.2C ஆக பதிவாகியுள்ளது. ஜூரிச் ஏரி 27.4C ஆக பதிவாகியுள்ளது, அதேபோன்று ஜெனிவா ஏரியின் நீர் 26C ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடதக்தக்கது.
நீர் ஆராய்ச்சி நிறுவனம் Eawag படி, சுவிஸ் ஏரிகளில் சராசரி வெப்பநிலை வாரத்தில் 27.6C ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது மத்திய தரைக்கடல் நாடுகளில் உள்ள நீரின் வெப்பநிலைக்கு சமம் என்பது குறிப்பிடதக்தக்கது.