சூரிச்சில் இடியுடன் கூடிய மழை : 16 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. திங்கள்கிழமை மாலை பெய்த இடியுடன் கூடிய கனமழை காரணமாக சூரிச் விமான நிலையம் 16 விமானங்களை திருப்பி அனுப்பியதாக அறிவித்துள்ளது.
கீஸ்டோன்-எஸ்டிஏ செய்தி நிறுவனத்தின் வேண்டுகோளின் பேரில் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
Kloten சூரிச் பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால், சூரிச் விமான நிலையத்தில் தற்காலிகமாக விமானங்களைக் கையாள முடியவில்லை என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் சில விமானங்களின் புறப்படுகையில் காலதாமதம் ஏற்பட்டள்ளதாகவும் தெரிவித்தனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் போது விமான நிலைய ஊழியர்கள் வெளியில் இருக்க அனுமதி இல்லை.
இடியுடன் கூடிய மழையின் போது சுவிட்சர்லாந்து முழுவதும் 70,000 க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்களை வானிலை மற்றும் காலநிலையியல் கூட்டாட்சி அலுவலகம் பதிவு செய்துள்ளளமை குறிப்பிடத்தக்கது.
©கீஸ்டோன்/எஸ்டிஏ