தலைவர் உயிருடன்… என்னை கட்டிப்பிடித்து அழுதார்..? சுவிசில் நடப்பது என்ன.? சுவிஸ் தமிழர் இல்லம் 21 வது தடவையாக அனைத்துலக ரீதியில் நடாத்திய உலகக்கிண்ணத்திற்கான காற்பந்து போட்டிகள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வின்டர்தூர் மாவட்டத்தில் இடம்பெற்றது.
சுவிசில் தெரிவு செய்யப்பட்ட அணிகளுடன் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இருந்து வீர வீராங்கணைகள் போட்டியில் கலந்துகொண்டனர். குறித்த நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில் சனிக்கிழமை அன்று மைதானத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக கடந்த 4ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்ட ரகுபதி என்பவருக்கும் முன்னாள் பொறுப்பாளரான ரகு குழுவினருக்கும் இடையிலையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கெல்லாம் பிளவுகளுக்கெல்லாம் அண்மைக்காலமாக சுவிட்சர்லாந்தில் பரவிவரும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவரது புதல்வி துவாரகா உயிருடன் இருக்கிறார் என்கின்ற விடயங்களே காரணமாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
துவராகாவின் வருகை என்கின்ற விடயங்கள் உண்மை என்றும் போலி என்றும் தமிழர் தரப்பில் இருவேறு கருத்துக்கள் நிலவிவருகின்ற சந்தர்ப்பத்தில் அது தொடர்பாக சுவிஸ் தேசிய தொலைக்காட்சி ஒன்று போலி என செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் அண்மையில் ரகுபதி என்பவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை தான் நேரில் சந்திந்ததாகவும் அவர் தன்னை கட்டியணைந்து கண்ணீர் சிந்தியதாகவும் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். தலைவர் அவர்கள் தன்னையே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை தலைமை தாங்கி ஏற்று நடாத்துமாறு பணித்ததாகவும் கூறிய ரகுபதி அப்போது தலைவராக இருந்த ரகுவை பதவியை விட்டு விலகும்படியும் கேட்டிருந்தார்.
இந்நிலையில் ரகு அவர்களும் இதனை ஏற்றுக்கொண்டு முரண்பாடுகளை தோற்றுவிக்ககூடாது என்றென்ணி பதவியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. எனினும் ரகு அவர்களுக்கு பதவி விலகும்படி நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் சுவிசில் ஒரு தரப்பினர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையிலையே தமிழர் விளையாட்டு விழாவிற்கு ரகுபதி தலைமை தாங்க ரகு அவர்களும் அங்கு சென்றதனாலையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டதாக விழாவில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் நிலமை மோசமாகிவிடக்கூடாது என்பதற்காக சுவிஸ் போலீசார் வரவழைக்கப்பட்டு ரகுபதி அவர்கள் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாகவும் மேலும் போராளிகள் கட்டமைப்பை சேர்ந்த முன்னால் போராளிகள் சிலரும் மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான திடீர் பிரச்சினைகள் தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைத்து போராட்டத்தின் வரலாற்றை சிதைக்கும் சிங்களத்தின் திட்டமிட்ட சதியாகவே புலம்பெயர் புத்திஐPவிகள் பார்க்கின்றனர்.
குறிப்பாக வரவிருக்கும் இலங்கையின் அதிபர் தேர்தல், தமிழர் தரப்பிலான பொதுவேட்பாளர் பிரச்சினை, அருச்சுனாவின் திடீர் வருகை, துவாரகா விடயங்கள் .. இறுதியுத்த இனப்படுகொலைகளுக்கு எதிரான ஐநாவின் கூட்டத்தொடர் போன்ற விடயங்களுடன் இவ்வாறான திடீர் முரண்பாடுகளை முடிச்சுப்போட்டு பார்க்க வேண்டிய தேவையும் கட்டாயமும் புலம்பெயர் தமிழர் மத்தியில் உள்ளது என்பதே நிதர்சணம்.
இன்று சுவிட்சர்லாந்தில் விடுதலைப்புலிகளுக்கு எத்தனை கிளைகள் இருக்கின்றது என்று தமிழர்களே வேடிக்கையாக கேட்கும் அளவிற்கு நிலமைகள சென்றுகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.