சுவிட்சர்லாந்தில் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஒரு சில நாட்களாக கடுமையான வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது.
அதன் அடிப்படையில் இன்று மற்றும் செவ்வாய்க் கிழமைக்கான வெப்ப அலை முன்னறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூரிச் பகுதி, கிராபண்டன், லேக் ஜெனிவா, வலாய்ஸ் மற்றும் டிசினோ உட்பட பல சுவிஸ் பிராந்தியங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் 34C வெப்பநிலையை எட்டும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் உத்தியோகபூர்வ வானிலை சேவை அந்த பகுதிகளுக்கு 4 முதல் 5 வரையிலான வெப்ப அலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், செவ்வாய் இரவு இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை சேவை மையம் அறிவித்துள்ளது.