சூரிச்சில் திடீர் வாகன சோதனை : பலரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் சூரிச்சில் இடம்பெற்ற தெரு அணிவகுப்புக்கு முன்னும் பின்னும், சூரிச் கன்டோனல் போலீசார், நெடுஞ்சாலை மற்றும் உஸ்டர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 180 ஓட்டுனர்களை சோதனை செய்தனர்.
அதில் 12 வாகனங்கள் ஓட்ட தகுதியற்றவர்களால் இயக்கப்பட்டதாக காவல்துறை இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

அவர்களில் 7 பேர் தொடர்ந்து வாகனம் ஓட்ட முடியாத நிலையில் இருந்தனர். அவர்களது ஓட்டுனர் உரிமம் சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டது. கூடுதலாக, பன்னிரண்டு பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதுடன் 20 பேருக்கு அபராதம் வழங்கப்பட்டது.
டஜன் கணக்கான காவல்துறை அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததோடு போதைப்பொருள் கண்டறியும் மோப்ப நாய்களும் பணியில் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.