சூரிச் ஜெப ஆலயத்தின் தீ வைக்க முயற்சித்தவர் கைது சனிக்கிழமை மாலை 8.00 மணியளவில் சூரிச் (Wiedikon) வீடிகோனில் உள்ள ஜெப ஆலயத்திற்கு வெளியே ஒருவர் பெட்ரோல் ஊற்றி தேவாலயத்திற்கு தீ வைக்க மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
அவரின் செய்கை பாதுகாவலர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு குறித்த நபரின் செய்கையை உடனடியாக தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் பின்னர் குறித்த நபர் தப்பியோடியுள்ளார்.
(c) 20mins.ch
சூரிச் நகர காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் கீஸ்டோன்-எஸ்டிஏ செய்தி நிறுவனத்திடம் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார். சூரிச் நகர போலீசார் உஷார்படுத்தப்பட்டு குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தடயவியல் நிறுவனம் குற்றம் நடந்த இடத்தில் ஆதாரங்களை பாதுகாத்தது. பின்னர் சூரிச் கன்டோனல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 32 வயதான சுவிஸ் நாட்டவர் அதிகாலை சூரிச் கன்டோனல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
முதற்கட்ட விசாரணையின்படிஇ மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார் என்பதும் தீவிரவாத நோக்கம் எதுவும் இல்லை எனவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.