சுவிட்சர்லாந்தில் விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கை..!! சுவிட்சர்லாந்தில் வெப்ப அலை பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிசினோ, ஜெனிவா மற்றும் வலாய்ஸ் உட்பட, அடுத்த சில நாட்களுக்கு பாசல், ரைன் பள்ளத்தாக்கு மற்றும் ஜெனீவா ஏரி படுகையில் மூன்றாம் நிலை வெப்ப எச்சரிக்கையை மத்திய அரசு இப்போது அறிவித்துள்ளது.
மேலும் ஆல்ப்ஸ் மலையின் தெற்குப் பகுதியில், மத்திய அரசு ஏற்கனவே சனிக்கிழமையன்று அபாய நான்காம் நிலை அபாயக்கட்டத்தை வெளியிட்டது. சமீபத்திய இயற்கை ஆபத்து கணிப்பீட்டின் படி, வெப்ப அலை ‘கணிசமான அளவில் தீவிரமடையக்கூடும்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் மூன்று நாட்களில் தினசரி சராசரி வெப்பநிலை 27 டிகிரி அல்லது அதற்கு மேல் இருக்கும்போது நான்காம் நிலை எச்சரிக்கை வழங்கப்படுகிறது.
வலாய்ஸ் மற்றும் ஜெனீவா ஏரி பகுதியில், நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 35 டிகிரி வரை எதிர்பார்க்கப்டுவதாக மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் டிசினோ மற்றும் பாசல் பகுதி அதேபோன்று ரைன் பள்ளத்தாக்கில், தாழ்வான பகுதிகளில் வெப்பநிலை 31 முதல் 33 டிகிரி வரை வெப்ப அலையின் வரம்பு மதிப்புகளை அடைய வாய்ப்புள்ளது.
இந்த பகுதிகளில் மூன்றாம் நிலை ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் சராசரி தினசரி வெப்பநிலை குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு 25 டிகிரி அல்லது அதற்கு மேல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.