சுவிட்சர்லாந்தில் அடுத்த ஆண்டு முதல் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டில், குறிப்பாக நடுத்தர வருமானம் பெறும் தொழிலாளர்களுக்கு 2.2 சதவீத ஊதிய உயர்வு தேவை என்று எம்ப்ளாய்ஸ் ஸ்விட்சர்லாந்து குழு தெரிவித்துள்ளது.
இந்த உயர்வு ‘நிறுவனத்தின் முதுகெலும்பாக இருக்கும் மக்களுக்கு தேவையான முதலீடு’ என்று சங்கத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்டீபன் ஸ்டூடர் கூறினார்.

‘இந்த நடவடிக்கை அனைத்து ஊழியர்களும் மதிப்புமிக்கவர்களாக உணரப்படுவதையும்இ சிறந்த முறையில் செயல்பட உந்துதலாக இருப்பதையும் உறுதிசெய்யும் நோக்கம் கொண்டது என ஊழியர்கள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
தங்கள் ஊழியர்களுக்கு சரியான முறையில் ஊதியம் வழங்காத நிறுவனங்கள் ‘வரும் ஆண்டுகளில் பின்தங்கிவிடும் அபாயம் உள்ளது. இந்த ஊதிய உயர்வு பாராட்டு மற்றும் பொருளாதார தொலைநோக்குப் பார்வையின் தெளிவான அறிகுறியாகும்.’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.