சுவிட்சர்லாந்தில் பசுவின் பால் கறக்கும் ரோபோ மீது ஹேக்கர் தாக்குதல் சுவிட்சர்லாந்தில் சுக் கன்டோன் Hagendorn, Cham இல், பால் கறக்கும் ரோபோக்களில் ஹேக்கர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் பால் கறக்கும் ரோபோக்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த முக்கியமான தரவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, சைபர் தாக்குதல்கள் விவசாயிகளின் மாடுகளையும் விட்டுவைக்கவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. பால் கறக்கும் ரோபோக்கள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டிருப்பதால், சைபர் கிரைமுக்கு வழிவகுக்கிறது.
Zug விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த தாமஸ் ரிக்கன்பேச்சர் இவ்வாறான செயற்பாடுகளில் இருந்து சிறந்த பாதுகாப்பு தேவை என்ற அவசியத்தை வலியுறுத்தினார்.

நவம்பர் 2023 இல் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தின் போது பால்கறக்கு ரோபோவை ஹேக் செய்தவர்கள் அதில் இருந்த தரவுகளை மீண்டும் தரவேண்டுமாயின் 10 ஆயிரம் டாலர்கள் கேட்டதாக விவசாயி தெரிவிக்கின்றார்.
பால் கறக்கும் ரோபோக்களில் பசுக்களின் கர்ப்பம் தரிக்கும் காலம் முதல் பால் தொடர்பான அனைத்து தகவல்களும் சேமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.