சூரிச் Limmatplatz இல் கார் மீது ட்ராம் மோதி விபத்து.!! Limmatstrasse இல், கார் மீது ட்ராம் மோதிய விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை லிம்மாட் பிளட்ஸ் (Limmatplatz) அருகே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், கார் பலத்த சேதம் அடைந்ததுடன், அதில் பயணம் செய்த இரண்டு பேர், காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக, 4, 13 மற்றும் 17 ஆகிய ட்ராம் பாதைகளில் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
எனினும், காலை 9:30 மணி முதல், ட்ராம்கள் மீண்டும் வழக்கம் போல் இயங்கின.
மூலம் – Zueritoday