சூரிச் கன்டோனல் வங்கியின் பெயரில் மோசடி கடிதங்கள்.!! சுவிட்சர்லாந்தில் இடம்பெறும் மோசடி குறித்து, சூரிச் கன்டோனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, சூரிச் கன்டோனல் பொலிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வாடிக்கையாளர்களின் QR Code அடங்கிய’ PhotoTan” ‘ மீண்டும் செயற்படுத்துமாறு கோரி, கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

பார்க்கும்போது உண்மையில் கன்டோனல் வங்கியால் அனுப்பப்படும் கடிதம் போலவே அதுவும் காணப்படுகிறது. ஆனால் சூரிச் கன்டோனல் வங்கியின் பெயரில் அனுபப்பப்படும் அவ்வாறான கடிதங்கள் போலியானவை எனவும் வங்கி நிருவாகம் அறிவித்துள்ளது.
அந்த QR குறியீட்டை ஸ்கான் செய்யும் எவரினது தனிப்பட்ட வங்கிக் கணக்கை மோசடி செய்பவர்களால், நேரடியாக அணுக முடியும் என்றும் சூரிச் கன்டோனல் பொலிஸ் மேலும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.