டெங்கு காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசிக்கு சுவிஸ் அங்கீகாரம் ஜூலை மாத இறுதியில் இருந்து, சுவிட்சர்லாந்தில் டெங்கு காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசியை சுவிஸ் மெடிக் அங்கீகரித்துள்ளது. வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளுக்கு பயணிக்கும் மக்களுக்கு தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது. இதுவரை, சுவிட்சர்லாந்தில் இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசிக்கு உரிமம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
Takeda Pharma AG என்ற உற்பத்தியாளரின் Qdenga தடுப்பூசியானது பெரியவர்கள், இளம் பருவத்தினர் மற்றும் நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படலாம் என்று சுவிஸ்மெடிக், சிகிச்சை தயாரிப்புகளுக்கான மத்திய சுவிஸ் ஒழுங்குமுறை ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. அடிப்படை நோய்த்தடுப்புக்கு இரண்டு தடுப்பூசிகள் தேவை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி முதன்மையாக மத்திய ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்குச் செல்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
குறித்த தடுப்பூசி நோயெதிர்ப்பு மண்டலத்தை வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ள கற்றுக்கொடுக்கிறது. ஒரு நபர் தடுப்பூசியைப் பெறும்போது, நோயெதிர்ப்பு அமைப்பு டெங்கு வைரஸின் பலவீனமான மாறுபாட்டை உணர்ந்துகொண்டு அதற்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது என இது தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிஸ்மெடிக்கின் கூற்றுப்படி, டெங்கு காய்ச்சல் ஒரு வைரஸ் நோயாகும், இது கொசுக்களால் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, குமட்டல் அல்லது தோல் வெடிப்பு போன்ற அறிகுறிகள் பொதுவாக கொசு கடித்த நான்கு முதல் ஏழு நாட்களுக்குப் பிறகு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது..
©கீஸ்டோன்/எஸ்டிஏ