பலத்த இடியுடன் கூடிய மழையால் சுவிட்சர்லாந்தில் வெள்ளப்பெருக்கு – புதன்கிழமை சுவிட்சர்லாந்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து உள்ளூர் பகுதியில் வெள்ளத்தை ஏற்படுத்தியது.
சென்ட் கேலன் பகுதி குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரு மணி நேரத்திற்குள் 50 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துர்காவ்வில், வெள்ளம் ஏற்படும் என்று காவல்துறை எச்சரித்திருந்தமையோடு மக்களை ஆபத்தான பகுதியை விட்டு வெளியேறுமாறும் கேட்டுக் கொண்டது.

மேலும் நேற்று புதன்கிழமை மாலை Schwyz மாகாணத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. கன்டோனல் போலீஸ் நடவடிக்கை மையத்திற்கு சுமார் 35 அவசர அழைப்புகள் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பல தீயணைப்பு துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் மரங்கள் வீழ்ந்தும் கற்கள் குவிந்தும் இருந்தமையினால் சில வீதிகள் தற்காலிகதாக மூடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.