வார இறுதியில் முடங்கப்போகும் சூரிச் விமானநிலையம்.?? மோசமடைந்து வரும் உலகளாவிய காலநிலை நெருக்கடியை முன்னிலைப்படுத்த எதிர்ப்பாளர்கள் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதால், வார இறுதியில் சூரிச் விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் விமானங்கள் தடைபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய சர்வதேச விமான நிலையமான சூரிச் ஏற்கனவே கடந்த வாரம் பெரும் இடையூறுகளைச் சந்தித்தது. ஜூலை 19 ஆம் தேதி காலையில் அனைத்து விமானங்களும் பல மணிநேரங்களுக்கு ரத்து செய்யப்பட்டன. ஏனெனில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்கள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிகப்பட்டிருந்தது.

அன்றைய தினம் நண்பகலில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டாலும், இந்த வார இறுதியில் விமான நிலையம் மற்றொரு குழப்பமான சூழ்நிலையால் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை ஜூலை 27 மற்றும் ஞாயிற்றுக்கிழமை 28 ஆகிய நாட்களில்இ தி லாஸ்ட் ஜெனரேஷன் என்று அழைக்கப்படும் சர்வதேச காலநிலை ஆர்வலர்கள் குழு, சூரிச் உட்பட பல ஐரோப்பிய விமான நிலையங்களில் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திட்டமிட்டபடி குறித்த போராட்டம் நடந்தால், கோடை விடுமுறைக்கு நடுவே விமானங்கள் புறப்படுதல் மற்றும் வந்து சேருதல் உள்ளிட்ட விமான நிலைய செயல்பாடுகளை இந்த நடவடிக்கை கணிசமாக பாதிக்கலாம்.
அதன் பங்கிற்கு, சூரிச் விமான நிலையம் ‘விரிவான பாதுகாப்புத் திட்டத்துடன்’ சாத்தியமான இடையூறுகளுக்குத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஜூரிச் கன்டோனல் காவல்துறையுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது என்றும் ஒரு செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
‘இவ்வாறான நடவடிக்கைகள் சட்டவிரோதமானது, ஏனெனில் அவை உள்கட்டமைப்பு மற்றும் விமான நடவடிக்கைகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் எனம்ம அவர் மேலும் குறிப்பிட்டார்.