Snapchat மூலம் அறிமுகமான பெண்ணை சந்திக்க சென்ற இளைஞன் மீது தாக்குதல் வின்டர்தூரில் 23 வயது இளைஞன் முகமூடி அணிந்த சிலரால் தாக்கப்பட்டுள்ளதாக வின்டர்தூர் போலீசார் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்
Snapchat என்கின்ற சமூகவலைத்தளத்தில் ஒரு பெண்ணுடன் குறித்த நபர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் சாட்டிங்கில் பல நாட்கள் பேசி வந்த நிலையில் தன்னை சந்திக்க வருமாறு குறித்த பெண் இளைஞனிடம் கேட்டுள்ளார்.
சந்திப்புக்கான நாள் மற்றும் இடம் குறிக்கப்பட்டது. இதனடிப்படையில் புதன்கிழமை மாலை 7 மணிக்கு பெர்க்ப்ளூமென்ரைனில் உள்ள ஒரு பூங்காவில் அவரைச் சந்திக்க இளைஞன் நேரில் சென்றுள்ளார்.

அங்கு பெண்ணுக்குப் பதிலாக, மூன்று முதல் நான்கு முகமூடி அணிந்த இளைஞர்கள் வந்து சிறிது நேரத்தில் பெப்பர் ஸ்ப்ரேயை தெளித்து, தடியடி நடத்தி மிரட்டியுள்ளளர்.
குறித்த இளைஞன் தப்பிக்க முயன்ற போதும் மற்றவர்களால் பிடிக்கப்பட்டு, கைகலப்பில் காயமடைந்தார். கடைசியாக அவர் அருகில் இருந்த வீட்டின் தோட்டத்தின் வழியாக தப்பித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றவாளிகள் தப்பிச்சென்றுள்ள நிலையில் குற்றத்திற்கான காரணம் மற்றும் பின்னணி இன்னும் தெரியவில்லை. இச்சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்களை புகார் அளிக்குமாறும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.