பிரேசிலிய கோழி சமைத்தமைக்கு சூரிச் சமையல்காரருக்கு அபராதம் சூரிச்சில் உள்ள ஒரு சமையல்காரர், சுவிஸ் கோழி மற்றும் நியூசிலாந்து ஆட்டிறைச்சி சமைப்பதாக வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தியதற்காக பெரும் அபராதத்தை செலுத்தியுள்ளார் –
உண்மையில் கோழி இறைச்சிகள் பிரேசிலில் இருந்தும் ஆட்டிறைச்சி உருகுவே நாட்டில் இருந்தும் பெறப்பட்டுள்ளது. அந்த நபர் பிழையான தகவலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியமையை ஏற்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் அந்நபருக்கு 2,600 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பல உணவகங்களில் இவ்வாறான தவறான தகவல்கள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, ஃபிரெஞ்ச் பேசும் சுவிட்சர்லாந்தின் நுகர்வோர் கூட்டமைப்பு, பத்தில் ஒன்பது முறை பிழையான தகவல் வழங்கப்பட்டிருப்பதை கண்டறிந்தது.
தகுந்த உற்பத்தி முறைகளைக் கடைப்பிடிக்காத நாடுகளில் இருந்து இறைச்சியை இறக்குமதி செய்வதை கர்வோர் கூட்டமைப்பு தடை செய்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.