கால்பந்து போட்டிகளில் இருந்து விடைபெற்றார் Xherdan Shaqiri நேற்று திங்கட்கிழமை முதல் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷாகிரி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக வலைதளங்களில் ஷகிரி கூறுகையில், தேசிய அணிக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. ‘பெரிய நினைவுகனோடு நான் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்கிறேன்!’ என குறிப்பிட்டிருந்தார்.
(c) KEYSTONE
ஷகிரி சுவிட்சர்லாந்திற்காக 125 போட்டிகளில் விளையாடி 32 கோல்களை அடித்துள்ளார். உலகக் கோப்பை 2010 முதல் யூரோ 2024 வரை ஏழு பெரிய போட்டிகளில் தோன்றிய ஒரே சுவிஸ் வீரர்.
அவரின் இந்த ஓய்வுக்கு பின்னராக பலரும் அவரைப்பற்றிய சாதனைகளை பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.