சூரிச் சிகையலங்கார நிலையத்தில் 8000 பிராங்குகள் கொள்ளையடித்த பலே திருடன் சூரிச்சின் மாவட்டம் 4 இல் உள்ள சிகையலங்கார நிலையத்திற்கு ஜன்னல் வழியாக திருடன் ஒருவன் புத்திசாலித்தனமாக நுழைந்து பெரும் தொகையான பணததை கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டள்ளது.
மாவட்டம் 4 இல் உள்ள சிகையலங்கார நிலையத்தின் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட நுழைவு கதவுக்கு மேலே ஒரு சிறிய ஜன்னலை கருவிகளை பயன்படுத்தி திருடன் திறக்கிறார். அவர் புத்திசாலித்தனமாக அந்த சிறிய ஐன்னல் வழியாக உள்ளே நுழைந்து திருட்டில் ஈடுபடுகின்றார்.

திருடன் பணப் பதிவேட்டைத் திருடி கடைசி சதம் வரை காலி செய்கிறான். 8,000-க்கும் அதிகமான பிராங்குகள் வரை பதிவேட்டில் இருந்ததாக கடையின் உரிமையாளர் ‘(s)சுவான்சிக் மினுட்டன்” (20-Min) பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். மேலும் ‘நான் பணப் பதிவேட்டை காலி செய்யாதது எனது முட்டாள்தனம்.’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளும் போலீசாரிடம் உள்ளது. திருடன் ஷார்ட்ஸ் அணிந்திருந்ததால், தடயவியல் நிபுணர்கள் டிஎன்ஏ தடயங்களைத் தேடுகிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது. அவர் திருட்டுக்கு எதிராக காப்பீடு செய்யவில்லை என்பதால் அவரது பணம் திரும்ப கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.