சூரிச்சில் போலீஸ் கார் டாக்ஸி மீது மோதி விபத்து சனிக்கிழமை காலை ஹார்ட்ப்ரூக்கில் அவசர பயணத்தின் போது சூரிச் நகர காவல்துறையின் ரோந்து கார் டாக்ஸி மீது மோதியது. இதன்போது டாக்ஸியில் பயணம் செய்த இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
நகர காவல்துறை அறிவித்தபடி, அதிகாலை 5 மணிக்குப் பிறகு, ரோந்துக் கார் ஹார்ட்ப்ரூக்கில் குடும்ப வன்முறை நடவடிக்கைக்கு அவசரப்பயணத்தை மேற்கொண்டிருந்தது.
Photo (c) KEYSTONE
பயணத்தின்போது ஹார்ட்ப்ரூக் சந்தியில் வைத்து போலீசாரின் கார் டாக்சியுடன் மோதியது. காயம் அடைந்த பயணிகள் மற்றும் டாக்சி டிரைவரை மருத்துவ உதவியாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இரண்டு வாகனங்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. விபத்தின் சூழ்நிலைகள் குறித்து சூரிச் கன்டோனல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். (SDA)