Rickenbach இல் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் காயம் நேற்று வியாழன் மாலை சூரிச் (Rickenbach) ரிக்கன்பாக் பகுதியில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக சூரிச் கன்டோனல் பொலிசார் அறிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில் நேற்று இரவு 7 மணிக்குப் பின்னர் 47 வயதான ஓட்டுநர் ஒருவர் இரண்டு குழந்தைகளுடன் ரிக்கன்பாக் பகுதியிலிருந்து வாகனத்தில் சென்றார்.
பட ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்
அப்போது எதிரே வந்த பிக்கப் ட்ரக் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில், சாரதி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் மற்றும் வேனின் 41 வயதான சாரதி மற்றும் அவரது பயணி ஆகியோர் சிறிய மற்றும் மிதமான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்த 5 பேரில் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் மீட்பு சேவை, ஆம்புலன்ஸ்கள் என்பன பணியில் ஈடுபட்டிருந்தன.
விபத்து நடந்த இடத்தை தீயணைப்பு துறையினர் பாதுகாத்து மாற்றுப்பாதை அமைத்திருந்ததோடு விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளில் கண்காணிப்பதற்காக ஒரு பாதுகாப்புக் குழுவும் நிறுத்தப்பட்டிருந்தது.