சூரிச்சின் ஒரு பகுதியில் வெந்நீர் வெட்டு.!! முக்கிய அறிவிப்பு.!! சூரிச்சின் ஒரு பகுதியில் வெந்நீர் இல்லாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பெரிய குழாய் சேதமடைந்ததன் காரணமாக, இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் சூரிச்சின் Höngg மாவட்டத்தில் சூடான தண்ணீர் தடைப்பட்டுள்ளது.

சேதத்தை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் ‘முழு வேகத்தில் நடந்து வருகின்றன’ என்று நகராட்சி அதிகாரிகள் கூறினாலும், குடியிருப்பாளர்கள் தங்கள் சூடான நீர் விநியோகத்தை திங்கள் வரை மீட்டெடுக்க முடியாது எனவும் அதற்கு முன்னர் எதிர்பார்க்க வேண்டாம் எனவும் கேட்டுள்ளனர்.