சுவிற்சர்லாந்தில் மலையேறும்போது பலியான அமெரிக்கப்பெண்!!
16 வயதான அமெரிக்க சுற்றுலாப் பயணி ஞாயிற்றுக்கிழமை வலைசில் நடைபயணம் மேற்கொண்டபோது இறந்துள்ளார்.
குறித்த சுற்றுலாப்பயணி 16 வயதான இளம் பெண் என தெரியவந்துள்ளது. குறித்த பெண் தனது நண்பரின் குடும்பத்துடன் விடுமுறையில் இருந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 க்குப்பிறகு மலையேற்றத்திற்கு சென்றபோதே கால்தடுக்கி கீழே விழுந்து இறந்துள்ளதாக கன்டோனல் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
மீட்புப் பணியாளர்கள் 16 வயது பெண்ணின் சடலத்தை மலையேற்றப் பாதையின் கீழே உள்ள ஆற்றங்கரையில் கண்டெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கன்டோனல் போலீசார் மேற்கொண்டுவருகின்றனர்.
Source:- Kantonal Polizei Valais