சுவிசில் எல்லை தாண்டிய தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மார்ச் மாத இறுதியில், சுவிட்சர்லாந்தில் ஏறக்குறைய ஜி-பெர்மிட் வைத்திருப்பவர்கள் 4 லட்சம்பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது 2023 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 4.3 சதவீதம் அதிகமாகும். மத்திய புள்ளியியல் அலுவலகம் திங்களன்று வெளியிடப்பட்ட புதிய தரவுகளிலிருந்து இது வெளிப்படுகிறது .
இந்த தொழிலாளர் தொகுப்பில் பாதிக்கும் மேலானவர்கள் பிரான்சில் இருந்து வருகின்றார்கள். 23 சதவீதத்திற்கும் அதிகமானோர் இத்தாலியிலும், 16.2 சதவீதமானவர்கள் ஜெர்மனியிலும் வசிப்பபவர்கள் ஆவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், எல்லை தாண்டிய பயணிகளின் எண்ணிக்கை 21.8 சதவீதம் அதிகரித்துள்ளது என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.