பாசலில் கார் மீது நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி புதன்கிழமை மாலை பாசல் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளார். இந்த விபத்தில் 26 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வியாழக்கிழமை காலை பாசல் நகர கன்டோனல் பொலிசார் அறிவித்தபடி, விபத்து இரவு 7 மணியளவில் நிகழ்ந்தது. அதன்படி, 77 வயதுடைய ஓட்டுநர் ஒருவர்இ சாலையின் தவறான பக்கத்தில் தவறுதலாக ஓட்டிச் சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மீது மோதினார்.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மோட்டார் சைக்கிள் சாரதி தவிர, சாரதியின் பயணியும் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கார் ஓட்டுனரான 77 வயது முதியவர் மீது அலட்சியமாக கொலை செய்ததற்காக அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.