கன்டோன் சுக்கில் உள்ள அல்ட்ட ஸ்டட்டில் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக சுக் போலீஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு இன்று புதன்கிழமை காலை 11 முப்பது மணியளவில் தகவல் கிடைத்தது.
சுக் நகரின் தன்னார்வத் தீயணைப்புத் துறை அவசர சேவைகளுடன் விரைவாகச் சென்றுஇ அடுக்குமாடி கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள சமையலறையில் தீ பரவுவதை கண்டறிந்தனர்.
தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து தீயை வேகமாக அணைத்தனர் . கடுமையான புகை மூட்டத்தால், அடுக்குமாடி குடியிருப்பில் புகையை அகற்ற வேண்டியிருந்தது.
தீ விபத்து ஏற்பட்ட போது பாதிக்கப்பட்ட குடியிருப்பில் ஒருவர் இருந்துள்ளார். குறித்த 83 வயதான பெண்மணி தன்னந்தனியாக பாதுகாப்பாக வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது சந்தேகத்திற்கிடமான புகை விஷம் காரணமாக சுக் கன்டோனின் அவசர சேவை பரிவினரால் குறித்த வயோதிப பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினு பாதிக்கப்பட்ட அபார்ட்மெண்ட்டுக்கு பாரியளவு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.