சுவிட்சர்லாந்தில் திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் பயிர்ச்செய்கைகளுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் முடிவடையும் நிலையிலும் சுவிட்சர்லாந்தின் பல்வேறு மாகாணங்களில் பனிப்பொழிவு இடம்பெற்று வருகின்றது. இதனால் சுவிஸ் பழ மரங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் அடுத்த சில நாட்களில் இந்த நிலமைகள் தீர்க்கமானதாக இருக்கும் என நம்பப்படுகிறது.
குறித்த பழ மரங்கள் பூக்கும் தருவாயில் இவ்வாறான சீரற்ற காலநிலை நிலவிவருகின்றது. எனவே இந்த காலநிலை நிகழ்வின் விளைவாக, அறுவடை போதுமான அளவு விளைவிக்கவில்லை என்றால், குறைந்த பழங்கள் மற்றும் ஒயின் திராட்சையே கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
இதனால் திராட்சை மற்றும் ஒயின்களுக்கான நுகர்வோர் விலைகள் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.