சூரிச் பகுதியில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் பல ட்ராம் விபத்துக்களை தடுக்க புதிய திட்டம் ஒன்று அண்மையில் முன்வைக்கப்பட்டது.
ட்ராம் விபத்துக்களால் அண்மையில் பல மரணங்கள் இடம்பெற்ற நிலையிலையே புதிய திட்டம் முன்வைக்கப்பட்டிருந்தது. சூரிச்சில் இயங்கும் ட்ராம்களின் முன்பகுதியில் ஏர் பேக்குகளை பொருத்தும் திட்டமே அது.
இத்திட்டத்தின் சோதனை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சூரிச்சின் பொது போக்குவரத்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் லியோ ஹெர்மன் கருத்துப்படிஇ இச்சோதனைக் கட்டம் 2024 கோடையில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த பொறிமுறையானது ட்ராம் ஓட்டுநரின் முன்பக்கத்தில் உள்ள சென்சார் மூலம் தூண்டப்பட்டு விபத்து இடம்பெற முன் ஏர் பேக்குகளை இயக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அது தொடர்பான சோதனை காட்சிகள் அடங்கிய காணொளியும் தற்போது வெளியாகி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.