சுவிஸ் விமானத்தின் கதவை நடுவானில் திறக்க முயன்ற நபர் சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம் பேங்காக்கில் இருந்து திரும்பி வந்த பிறகு சூரிச் விமான நிலையத்தில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமானத்தின் கதவை நடுவானில் திறக்க முயற்சித்ததால் அவரை விமானத்தில் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
பறக்கும் விமானத்தின் கதவைத் திறப்பது அனுமதிக்கப்படாத ஒரு விடயம். ஆகையால் இதை முயற்சித்த குறித்த நபரை விமான குழு உறுப்பினர்கள் விமானத்தின் பின்புறத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
பின்னர் விமானம் சுவிட்சர்லாந்தை வந்திறங்கியதும் அவர் சூரிச்சில் வைத்து கைது செய்யப்பட்டார். கட்டுக்கடங்காத பயணிகளால் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு, சுவிட்சர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட விமான நிறுவனங்கள் 1,347 சம்பவங்களை பெடரல் அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.