சூரிச் நகரம் 150 மீற்றர் நீளமான கப்பலுடன் ஒரு பெரிய புதிய துறைமுகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் 2031 ஆம் ஆண்டளவில், சூரிச் ஏரியில் சுமார் 150 மீட்டர் நீளமுள்ள 15 மீட்டர் அகலமுள்ள பிரதான கப்பலுடன் புதிய துறைமுகம் அமைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கிறார்கள்.
நகர சபையானது இத்திட்டத்திற்காக சுமார் 8.9 மில்லியன் பிராங்குகள் கடனுக்காக உள்ளுராட்சி மன்றத்திடம் விண்ணப்பித்து, இன்று புதன் கிழமை வெளியிட்ட அறிவிப்பின்படி இத்திட்டம் நடமுறைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.
நகர சபையின் கூற்றுப்படிஇ டிஃபென்ப்ரூனென் ரயில் நிலையம் மற்றும் சோலிகோன் நகர எல்லைகளுக்கு இடையே உள்ள ஏரிக்கரை பகுதியை மறுசீரமைத்து இத்துறைமுகம் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
புதிய பெரிய துறைமுக வசதியானது, இருக்கைகள் மற்றும் ஒரு விசாலமான மொட்டை மாடியுடன் கூடிய உணவகம், உட்பட மேலும் பல அம்சங்களை கொண்டதாக இருக்கும எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.