சூரிச் கன்டோனல் போலீசார் கடந்த இரண்டு வார இறுதிகளில் பல கிளப் மற்றும் பார்களில், ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களை சோதனை செய்தனர்.
அதில் 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சூரிச் கன்டோனல் காவல்துறை இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்தபடி, Bülach, Dietikon, Hinwil, Uster மற்றும் Winterthur ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 13 பார்கள், கிளப்புகள் மற்றும் நடன கிளப்புகளில் ஐந்து இரவுகளில் சோதனை செய்யப்பட்டன.
பட ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்
கைது செய்யப்பட்ட 47 பேரும் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது. ஒருங்கிணைப்புச் சட்டத்தை மீறியதாகக் அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பல பார்களில் கைத்துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெற்று கைத்துப்பாக்கி, பொல்லுகள் மற்றும் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
ஆயுதச் சட்டம், சூதாட்டச் சட்டம், சட்டவிரோத வேலைக்கு எதிரான கூட்டாட்சி சட்டம் மற்றும் பிற சட்டங்களின் மீறல்கள் அவர்கள் மீது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.