சுவிஸ் ரயில்வே இத்தாலிய ரயில் கால அட்டவணையில் மாற்றங்கள் செய்வதாக அறிவித்துள்ளது.
மிலானில் இருந்து பல ரயில்கள் தாமதமாக தங்கள் சுவிஸ் இடங்களுக்கு வருவதால், சுவிஸ் எல்லையில் ரயில் செயல்பாடுகள் சீர்குலைந்திருந்தன.
இதன் அடிப்படையில் தேசிய ரயில் நிறுவனம் இத்தாலி ரயில் நேரஅட்டவணைகளை சீர்செய்துள்ளது.
சுவிஸ் தேசிய ரயில் சேவையின் பரிந்துரையின்படிஇ மிலானில் இருந்து மூன்று வார நாட்களில் இரண்டு ரயில்கள் முன்பை விட 13 முதல் 15 நிமிடங்கள் முன்னதாகவே புறப்படுவதாக தெரிவிக்கிறது.
இதனால் சரியான நேரத்தில் சுவிஸ் நிலையங்களுக்கு ரயில்கள் வந்து சேரும் என தெரிவிக்கப்படுகிறது.