சுவிட்சர்லாந்தில் பெட்ரோல் விலை உயர்கிறது. வாகன ஓட்டிகளுக்கு ஒரு மோசமான செய்தி ஒன்றி வெளியாகியுள்ளது.
குளிர்கால மாதங்களில் வீழ்ச்சியடைந்த பெற்றோல் விலை மீண்டும் கோடை காலம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
சுவிஸ் வாகன ஓட்டிகள் தற்போது ஒரு லிட்டர் 95 ரக பெட்ரோலுக்கு சராசரியாக 1.90 பிராங்குகள் செலுத்த வேண்டும். இருப்பினும், சில பிராந்தியங்களில், விலை இன்னும் அதிகமாக உள்ளது.
உதாரணமாக, சில இடங்களில் லிட்டருக்கு முறையே 2.29 மற்றும் 2.37 பிராங்குகளாக காணப்படுகிறது. கொத்தார்ட் மோட்டார்வேயில் உள்ள இரண்டு பெட்ரோல் நிலையங்கள் மற்றும் டெசினோவில் உள்ள பியோட்டா ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விலை நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்ததாக காணப்படுகிறது.
மேலும் நிபுணர்களின் கூற்றுப்படி, எரிபொருள் விலை தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.