சுவிஸ் அரசுக்கு தலை இடியாக மாறியுள்ள பாரிய குடியேற்றம் பாரிய குடியேற்றம் சுவிட்சர்லாந்திற்கு மோசமானதாக இருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
எக்கோனோமிக்ஸ் சுயிஸ் என்ற சுவிட்சர்லாந்தின் வணிகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பானது, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரச் செழுமைக்கு அளிக்கும் முக்கியப் பங்களிப்பை வழக்கமாக வலியுறுத்தினாலும், அது இப்போது தனது போக்கை மாற்றியுள்ளது.
மக்கள்தொகைப் பெருக்கத்தின் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் ‘சமீபத்திய ஆண்டுகளில் குடியேற்றம் மிக அதிகமாக உள்ளது என்பதை நாம் இன்று உணர வேண்டும்’ என்று எக்கோனோமிக்ஸ் சுயிஸ்ன் தலைவர் கிறிஸ்டோப்மேடேர் கூறுகிறார்.
‘எல்லையற்ற குடியேற்றத்திற்கு எதிராக நாங்கள் பேச முடியாது. ஆனால் நடவடிக்கைகள் தேவை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
சுவிஸ் மக்கள் கட்சி குடியேற்றத்தைத் தடுப்பதற்கான தேசிய வாக்கெடுப்பை முன்னெடுத்துச் செல்லும் நிலையில் எக்கோனோமிக்ஸ் சுயிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.