கன்டோன் சூரிச்சில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடிய நபரை தேடும் முயற்சி தோல்லிவியில் முடிந்துள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில்,
நேற்று செவ்வாய்க்கிழமை சூரிச்கன்டோனில் உள்ள ரேகன்டோர்வ் பகுதியில் எலக்ரானிக் ஸ்கூட்டரில் நபர் ஒருவர் பயணித்துள்ளார். குறித்த நபரை ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசார் ஒருவர் நிறுத்த முற்பட்ட வேளை இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தடுத்து நிறுத்த முற்பட்ட போலீசை ஸ்கூட்டர் ஓட்டிவந்த நபர் சரமாரியாக தாக்கியுள்ளார். அதில் இருவரும் கீழே விழுந்துவிட ஸ்கூட்டர்ஓட்டுனர் எழுந்து தனது எலக்ரானிக் ஸ்கூட்டரில் ஏறி தப்பிச்சென்றுள்ளார்.
காயங்களுடன் கீழே விழுந்த போலீசாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர் யார் என்பது தொடர்பாக உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்தது.
குறித்த நபர் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கும் படியும் கன்டோன் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.