சுவிஸில் “தூவானம்” ஈழத்து கலைஞர்களின் முழுநீளத் திரைப்படம் சுவிற்சர்லாந்து நாட்டில் 8 வது திரையிடல் “தூவானம்” ஈழத்து கலைஞர்களின் முழுநீளத் திரைப்படம்
27.04.2024 சனிக்கிழமை மாலை 17.00 மணிமுதல் யாழ்.போதனா வைத்தியசாலையின் முன்னைனாள் வைத்தியர் கலாநிதி. சிவன்சுதனின் முழு நீளபடமான «தூவானம்» தாயகத் திரை அரங்குகளில் வெற்றி நடை போட்டு பேர்ன், சைவநெறிக்கூடம் – அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் மேல் மண்டபத்தில் (Europaplatz 1B, 3008 Bern) 8வது திரிடையிடலாக 27. 04. 2024 சனிக்கிழமை மாலை 17.00 திரையிடப்படவுள்ளது.
இத் திரைப்படம், ஈழத்தமிழர் வாழ்வியலையும் கலை பண்பாட்டுத் தனித்துவத்தையும் உணர்வு உள்ளத்து உணர்வுடன் வெளிக்காட்டி நிற்கும் திரைப்படமாக வரவேற்பைப் பெற்று வருகின்றது.
முழுக்க முழுக்க ஈழுத்துக் கலைஞர்களால் உருவான இத் திரைக்காவியம் உலகம் முழுவதும் வாழும் எமது புலம்பெயர் மக்களுக்காகத் திரையிடப்பட்டு சுவிற்சர்லாந்தில் மேற்காணும் எட்டாவது திரையிடலாக அமைந்துள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பயின்று, புலம்பெயர்ந்து வாழும் வைத்தியர்களின் அமைப்பான JMFOA (JAFFNA MEDICAL FACULTY OVERSEAS AUMNI) நல்லாதரவுடன் திரைப்படம் வெளியிடப்பட்டு வருகின்றது.
இத் திரைப்படமானது புலம்பெயர் தமிழ்ச் சமூகம் எவ்வாறு தாயகத்து மக்களின் நிலையான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவலாம் என்ற கருத்தைத் தாங்கி வருகின்றது.
இதுபோன்ற ஈழத்துப் படைப்புகளை ஊக்குவிக்கவும் அவர்களின் தேவையை அறிந்துகொள்ளவும் புலம்பெயர் சமூகத்தின் இணக்கத்தினை வேண்டி நிற்பதாக படக்குழு முன்னரே தெரிவித்துள்ளது.
சைவநெறிக்கூடம் ஆகிய நாமும் இம் முழுநீளத் திரைப்படத்திற்கு சுவிற்சர்லாந்துவாழ் தமிழ்மக்களின் இசைவினையும் இணக்கத்தினையும் வேண்டி வரவேற்கின்றோம்.