இத்தாலியின் பொதுப்போக்குவரத்து வேலைநிறுத்தம் : சுவிஸ் பயணிகள் பாதிப்பு ஜேர்மனியின் போக்குவரத்துத் துறை நேற்று வியாழன் அன்று வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, நாடு தழுவிய 24 மணிநேர பொது போக்குவரத்து வேலைநிறுத்தம் இன்று இத்தாலியில் நடைபெற்றுவருகிறது.
இவ்வேலைநிறுத்தத்தினால் விமானம், ரயில் மற்றும் பொது போக்குவரத்து பயணிகள் சிலர் தாமதங்கள் மற்றும் பயண ரத்துகளை சந்திக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிஸ் மற்றும் இத்தாலிய விமான நிலையங்களுக்கு இடையிலான விமானத் தடைகள் குறித்து இதுவரை சுவிஸ் ஏர்லைன்ஸ் எதுவும் தெரிவிக்கவில்லை.
எனினும் சுவிஸ் தேசிய ரயில்வேயின் இணையதளம், ‘வேலைநிறுத்தம் காரணமாக, இத்தாலியில் ரயில் போக்குவரத்து குறைவாக உள்ளது எனவும், உங்கள் பயணத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் அறிவித்துள்ளதாக அறியமுடிகிறது.