சூரிச் ஏரியில் சேவையில் ஈடுபடும் கப்பல்கள் சில எரிபொருளில் இருந்து மின்சாரத்தில் இயங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கப்பல்களினது உட்புற அமைப்புகளும் மாற்றம் செய்யப்பட்டு புதிய சேவையினை மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
வெகு விரைவில் இந்த மின்சாரத்தில் இயங்கும் கப்பல்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னரே குறித்த கப்பல் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. தற்போது அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் 2027 ம் ஆண்டுக்குள் புதிய மின்சாரக்கப்பல்கள் சூரிச் ஏரியில் பயணத்தில் ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளது.
இதுமாத்திரமின்றி ஏற்கனவே மூன்று புதிய லிமாட் படகுகள் மின்சார உந்துவிசை அமைப்புகளுடன் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.