சுவிசில் நடந்த திடீர் சோதனை : குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு அதிர்ச்சி.!! சுவிட்சர்லாந்தில் குழந்தைகளுடன் காரில் பயணிப்பவர்களுக்கான சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சோதனையில் பலர் தமது குழந்தைகளுக்கான இருக்கைகளை சரியாக பொருத்தியிருக்காமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காரில் குழந்தை இருக்கை இல்லாமல் இருப்பதால் அல்லது சரியாக பொருத்தப்படாமல் இருப்பதால் குழந்தைகள் விபத்தில் பலத்த காயம் அல்லது மரணம் மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
குழந்தை இருக்கை சரியாகப் பயன்படுத்தப்பட்டால் மட்டுமே அதன் முழு பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும். BFU உடன் இணைந்து TCS நடத்திய புதிய கணக்கெடுப்பிலையே குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அவர்கள் மேற்கொண்ட சோதனையின் போது ஒவ்வொரு இரண்டாவது குழந்தையும் காரில் குழந்தை இருக்கையை தவறாகப் பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது. எனவே BFU மற்றும் TCS ஆகியவை இணைந்து இது சம்மந்தமான பொதுவான தவறுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில்இ குழந்தை இருக்கைகள் 12 வயது வரை அல்லது 150 செ.மீ உயரம் வரை கட்டாயம். எனினும் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது பல குழந்தைகள் குழந்தை இருக்கை இல்லாமலையே காரில் அழைத்துச்செல்லப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.