சுவிட்சர்லாந்தில் குழந்தை கொடுப்பனவுகளுக்கான தொகையை அதிகரிக்க ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய கவுன்சில் ஆணையம் இந்த யோசனையை முன்வைத்துள்ளது. குறைந்தபட்சம் 50 பிராங்குகளால் குழந்தை கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என்றே நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் வாக்கெடுப்பு நடந்து பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டால் இத்திட்டம் அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ஒரு சில மாநிலங்களில் மட்டுமே குழந்தை கொடுப்பனவு 250 பிராங்குகளாக இருக்கிறது. எனவே அதிரித்திருக்கும் பணவீக்கம் மற்றும் பிரீமியம் மற்றும் வாடகை காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலமைகள் காரணமாகவே இந்த திட்டம் முன்வைக்கப்பட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.