சுவிட்சர்லாந்தில் ஒயின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தில் 101 மில்லியன் லீட்டர் ஒயின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட சுமார் இரண்டு மில்லியன் லிட்டர் அதிகமாகும்.
வியாழன் அன்று விவசாயத்துக்கான பெடரல் அலுவலகம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில், பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் 79.5 மில்லியன் லீட்டர் ஒயின் உற்பத்தி செய்யப்பட்டது.
ஜெர்மன் மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் 16.5 மில்லியன் லீலட்டரும் இத்தாலிய மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் 4.9 மில்லியன் லீட்டர் ஒயினும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த மழைப்பொழிவு திராட்சை உற்பத்தியில் சாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, மிகவும் ஆரோக்கியமான திராட்சைகள் உற்பத்தியாக்கப்பட்டு பழமை வாய்ந்த சிறந்த ஒயின்களை தயாரிக்க முடியும் எனவும் குறிப்பிடுகிறார்கள்.