சுவிட்சர்லாந்தில் வாடகைகள் இன்னும் அதிகரித்துக்கொண்டு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. சில பிராந்தியங்களில் மற்ற கன்டோன்களை விடவும் இந்த அதிகரிப்பு காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் தளமான ஹோம்கேட் மற்றும் ஜூரிச் கன்டோனல் வங்கி நேற்று திங்கட்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையியையே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சராசரியாக, வாடகைகள் கடந்த ஆண்டு இதே நேரத்தில் இருந்ததை விட இப்போது 1.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிராந்திய ரீதியாக, கிராபண்டனில் வாடகைகள் மிக அதிகமாகவும் அதைத் தொடர்ந்து சூரிச்விலும் இந்த அதிரிப்பு காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் ஜெனீவாவில் 105.2 சதவீத அதிகரிப்பும், லூசர்ன் மற்றும் பெர்னில் தலா 4.8 சதவீத அதரிகரிப்பும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.