சுவிட்சர்லாந்தில் சில நகரங்களில் வீட்டுப்பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டுப் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசாங்கம் புதிய ‘செயல் திட்டத்தை’ உருவாக்குகிறது.
சுவிட்சர்லாந்தில் மலிவு விலையில் வீடுகள் இல்லாதது, குறிப்பாக பெரிய நகரங்களில் உள்ளவர்களுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.
இது தொடர்பாக செவ்வாயன்று நடைபெற்ற வீட்டுத் தட்டுப்பாடு குறித்த இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
இதன்போது பொருளாதார அமைச்சர் கை பார்மெலின், மண்டலங்கள் மற்றும் நகராட்சிகள், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார்.
கட்டுமான அனுமதிகளை விரைவுபடுத்தும் நோக்கில் புதிய திட்டத்தை இதன்மூலம் கொண்டு வந்தார். பொதுவாக மக்களுக்கு வீட்டு விநியோகத்தை அதிகரிக்கவும், குறைந்த வாடகையுடன் கூடிய வீடுகள் கிடைப்பதற்குமான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் கலந்துரையாடப்பட்டு நன்கு திட்டமிடல் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.