30 வயதான டிரைவர்இ எதிரே வந்த இராணுவ வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளார். வாகனம் ஓட்டும் போது தூங்கிவிட்டதனாலையே விபத்து நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விபத்தில் கார் ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதுடன் ராணுவ வீரர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. எனினும் வாகனங்களுக்கு அதிகளவான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் காரணமாக பல மணி நேரம் சாலை மூடப்பட்டு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் கார் ஓட்டுனரின் ஓட்டுனர் உரிமம் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.