சூரிச் Urdorf நகரில் இன்று பகல் இனந்தெரியாத கைவிடப்பட்ட பொதி ஒன்றால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஊர்டோர்ப் இல் பொலிஸ் மற்றும் தீயணைப்புத் துறைகளின் ஒரு பாரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதாக உள்ளுர் ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மீட்புப் பணியாளர்கள் பார்சல் மையத்திற்கு வந்து அதனை மீட்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சூரிச் கன்டோனல் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியபடி, இந்த நடவடிக்கைக்கான காரணம் அறியப்படாத பொருள் அடங்கிய பொதியாகும் எனவும் மீட்புப் பணியாளர்கள் பொருளை பாதுகாப்பாக அகற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.