சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அமெரிக்கர் ஒருவர் சமீபத்தில் தவறான முறையில் குப்பைகளை அகற்றியமையால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு அட்டைப்பெட்டியை ஒரு டிராம் நிறுத்தத்தில் அமைந்துள்ள குப்பைத் தொட்டியில் வீசியுள்ளார்.
அதில் அவருடைய ஒரு தொலைபேசியும், பெயரும் விலாசமும் அடங்கிய அட்டையும் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் போலீசாரிடமிருந்து கழிவு மேலாண்மை விதிகளுக்கு இணங்காததற்காக எச்சரிக்கை கடிதத்தை பெற்றுள்ளார்.
மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும் குப்பையை சாதாரண தொட்டியில் வீசியதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த எச்சரிக்கை பற்றி போலீசாரிடம் தெரிவித்த அந்த நபர் கழிவகற்றும் சட்டம் பற்றி தனக்கு தெரியாது என தெரிவித்திருந்தார்.
எனினும் இப்போது 320 பிராங்குகள் அபராதத்தை அவர் பெற்றுக்கொண்டதாக உள்ளுர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.