ஜெனிவா ஏரியில் மேல் ஆபத்தாக பறந்த ஈஸிஜெட் விமானம்!! ஈஸிஜெட் ஏர்பஸ் விமானம் ஜெனிவா ஏரியின் மேற்பரப்பில் மிகத்தாழ்வான உயரத்தில் ஆபத்தான முறையில் பறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் இருந்து ஜெனிவா நோக்கி ஈஸிஜெட் 157 பயணிகளுடன் விமானம் பறந்து கொண்டிருந்தது.
விமான நிலையத்தை நெருங்கும் போது, ஜெனீவா ஏரியின் மேற்பரப்புக்கு ஆபத்தான முறையில் அருகில் இருப்பதைக் கண்டதாக, ஜெனிவா ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் நவம்பர் 5 அன்று இடம்பெற்றுள்ளபோதும் இதுவரையில் இச்சம்பவம் தொடர்பாக நிறுவனம் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என குறித்த ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது.
கேள்விக்குட்படுத்தப்பட்ட நிறுவனம் உடனடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் விமானிகள் தங்கள் பணிகளில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டதாக சுட்டிக் காட்டியுள்ளது. குறித்த சம்பவ தினம் அன்று விமானம் சுமார் 230 மீட்டர் உயரத்தில் பறந்துள்ளமை மிகவும் ஆபத்தான செயல் என்றும் இது சாதாரணமாக பறக்கவேண்டிய ஆகக்குறைந்த அளவை விட மூன்று மடங்கு குறைவானது என்றும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.