தட்டம்மை தொற்று காரணமாக லவுசானிலுள்ள ஹோட்டல் மேலாண்மை பள்ளி வளாகம் பிப்ரவரி 18 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி நடுப்பகுதியில் இருந்து, ஆறு மாணவர்கள் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோடு சுமார் 20 பேர் அறிகுறிகளுடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கன்டோனல் மருத்துவரின் அறிவுறுத்தல்கள் காரணமாகஇ லவுசானில் உள்ள ஹோட்டல் மேலாண்மை பள்ளி வளாகத்தை மூட வேண்டியிருந்தது என்று வெள்ளிக்கிழமை ஹோட்டல் மேலாண்மை பள்ளியின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தட்டம்மை தடுப்பூசி நிலையை சரிபார்க்க கன்டோனல் சுகாதாரத் துறை இப்போது உத்தரவிட்டுள்ளது.
பள்ளி நிர்வாகம் அனைத்து மாணவர்கள் மற்றும் ஊழியர்களது தடுப்பூசி நிலையைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் மற்றும் வரவிருக்கும் நாட்களில் சமூக தொடர்புகளை கட்டுப்படுத்தவும் பரிந்துரைத்துள்ளது.