சூரிச் கன்டோனில் தொலைபேசி மூலம் ஏமாற்றி பணம் பறிக்க முற்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சூரிச் கன்டோனில் உள்ள உற்றிக்கோன் அம் சீயில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிற்பகல் இரண்டு முப்பது மணியளவில், ஒரு நபர் 117 என்ற அவசர எண்ணிற்கு தொலைபேசி மோசடி செய்யபவர் பற்றிய தகவலை வழங்கியதன் அடிப்படையிலையே போலீசாரிடம் அவர் சிக்கியுள்ளார்.
ஆதாரம்: சூரிச் கன்டோனல் போலீஸ்
சூரிச் கன்டோனல் வங்கி ஊழியரைப்போன்று நடித்தே தொலைபேசியில் குறித்த நபர் பேசியதாக முறைப்பாடு தெரிவித்தவர் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக தேடுதல் வேட்டையில் இறங்கிய சூரிச் கன்டோனல் போலீசார், உற்றிக்கோன் அம் சீயில் ஒரு சந்தேகத்திற்கிடமான நபரைக் கண்டனர்.
அவரை அடையாள சோதனைக்கு உட்படுத்தினர். 63 வயதான அந்த சுவிஸ் நபர் பணம் வசூலிப்பது உறுதியானது. உடனடியாக அவரை கைது செய்த போலீஸ் விசாரணைக்குப் பிறகுஇ அவர்கள் அவரை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.