சுவிஸில் அதிகம் விற்பனையாகும் “dafalgan” மாத்திரையின் விலை அதிகரிப்பு – சுவிட்சர்லாந்து நாட்டில் அதிகம் விற்பனையாகும் வலிநிவாரணியான டபல்கானின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
16 மாத்திரைகள் உள்ளடக்கிய 500மில்லிகிராம் குளிசைகள் கொண்ட ஒரு பக்கேட்டின் விலை இப்போது சில மருந்தகங்களில் 5.90 பிராங்குகளாக காணப்படுகிறது.
இது முன்பை விட இரண்டு மடங்கு அதிகம். இது பற்றி கருத்து வெளியிட்ட மருந்தின் உற்பத்தியாளரான UPSA வெளிநாட்டில் மருந்து உற்பத்தி செயல்முறையில் ஏற்பட்ட செலவுகளால் இந்த விலை அதிகரிப்பு என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சுவிட்சர்லாந்தில் இந்த மருந்தின் பற்றாக்குறையை தவிர்க்கும் பொருட்டு, டபள்கானுக்க மாற்றாக பரசிட்டமாலை பிரான்சில் இருந்து இறக்குமதி செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.