சொலுத்தூர்ன் மாகாணத்தில் இடம்பெறவிருக்கும் “மாபெரும் தைப்பொங்கல் விழா” சுவிட்சர்லாந்தின் தமிழ்க் கல்விச்சேவையும் சுவிற்சர்லாந்து தமிழ்ச்சங்கமும் இணைந்து முதல் முறையாக இடம்பெறும் தமிழர் தைப்பொங்கல் விழா நாளை 3ம் திகதி சொலுத்தூர்ன் மாகாணத்தில் இடம்பெற இருக்கின்றது. காலை 10 மணிமுதல் இடம்பெறும் இந்நிகழ்வில் பல்வேறு கலை காலசார நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது.
சிறியவர் மற்றும் பெரியவர்களின் நாட்டார் கலை நிகழ்வுகள் முதல் இன்னும் பல பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றது.
தமிழ் மக்களோடு எனைய இன மக்களும் கலந்துகொள்ளும் விழாவில் சுவிற்சர்லாந்து நாட்டின் முதன்மை அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

தை மாதத்தின் சிறப்பு,தைப்பொங்கலின் பெருமை, தமிழர் மரபுவழிப் பண்பாடு
ஆகியவற்றை எமது தமிழ்க்குழந்தைகளுக்கும் இளையோருக்கும் சுவிஸ் நாட்டில் வாழும் ஏனைய இன மக்களுக்கும் அறியச்செய்வதும் தமிழர் பண்பாட்டின் பெருமையைத் தொடர்ந்து பேணும் பொருட்டு தை மாதத்தினைத் தமிழ்மரபுத் திங்களாக அறிவிப்பதற்கான ஏதுநிலைகளை ஏற்படுத்துவதும் இவ்விழாவின் நோக்கங்களாகும்.

இவ்விழாவில் தமிழர் பண்பாட்டு உணவுவகைகளோடு தமிழர் பண்பாட்டுப் பொருள்களையும் பெற்றுக்கொள்ளலாம்.